20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா புதிய சாதனை


20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா புதிய சாதனை
x

Image Courtesy : AFP 

காமன்வெல்த் கிரிக்கெட்டில் ஸ்மிரிதி மந்தனா அதிரடியால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் இந்திய அணி நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிரடியால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சேசிங்கின் போது 1000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்குப் பிறகு 1000-க்கும் மேற்பட்ட ரன்களைக் கடந்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மந்தனா சேசிங்யின் போது 1059 ரன்கள் குவித்துள்ளார். கோலி 1789 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் 1375 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

1 More update

Next Story