ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரரானார், டேவிட் வார்னர்


ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரரானார், டேவிட் வார்னர்
x

image courtesy; AFP

தினத்தந்தி 26 Dec 2023 11:26 AM GMT (Updated: 26 Dec 2023 12:24 PM GMT)

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார்.

சிட்னி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 66 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த 38 ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடித்துள்ள ரன்களின் எண்ணிக்கை 18,515 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற ஸ்டீவ் வாக்கின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (27,368 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். இதுவரை 2-வது இடத்தில் இருந்த ஸ்டீவ் வாக் (18,496 ரன்கள்) தற்போது 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


Next Story