இறுதிபோட்டியில் தோல்வி - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியது என்ன ?

Image Tweet Babar Azam
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நிறைவடைந்துள்ளது.16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, 'சூப்பர்12' சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறின. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 138 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த நிலையில் தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது ;
இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சாம்பியனாவதற்கு தகுதியானவர்கள் மற்றும் நன்றாக போராடினார்கள். எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. , நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம் ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது
"எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடச் சொன்னேன், ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் . வீரர்கள் பந்துவீச்சில் நன்றாகப் போராடினார்கள். எங்கள் பந்துவீச்சு உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக, ஷஹீனின் காயம் எங்களைத் தள்ளிப்போட்டது, ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதியாகும். என தெரிவித்தார்.






