டோனி - யூசுப் பதானின் 13 ஆண்டு கால சாதனையை தகர்த்த ஹூடா - அக்சர் ஜோடி...!


டோனி - யூசுப் பதானின் 13 ஆண்டு கால சாதனையை தகர்த்த  ஹூடா - அக்சர் ஜோடி...!
x

Image Courtesy: AFP 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மும்பை,

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 94 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை பற்கொடுத்து இந்திய அணி தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஹூடா-அக்சர் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் 68 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது .

சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். மறுமுனையில் அக்சர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் டோனி - யூசப் பதான் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். இவர்கள் 2009- ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தற்போது அக்சர் - ஹூடா ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அதனை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6-வது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.


Next Story