சொன்னதை செய்து காட்டினார் - கோலியின் விக்கெட்டை வீழ்த்திய சித்தார்த்துக்கு ஜஸ்டின் லாங்கர் பாராட்டு


சொன்னதை செய்து காட்டினார் - கோலியின் விக்கெட்டை வீழ்த்திய சித்தார்த்துக்கு ஜஸ்டின் லாங்கர் பாராட்டு
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை லக்னோ அணி வீரர் சித்தார்த் கைப்பற்றினார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் நேற்றி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் விக்கெட்டை தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் கைப்பற்றினார். அவர் இந்த வருடம்தான் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகி உள்ளார். அதில் முதல் போட்டியில் விக்கெட்டை எடுக்காத அவர் இப்போட்டியில் இந்தியாவின் ஜாம்பவான் வீரராக போற்றப்படும் விராட் கோலியை தம்முடைய கெரியரின் முதல் விக்கெட்டாக எடுத்து சாதனை படைத்தார்.

இந்நிலையில் மணிமாறன் சித்தார்தை லக்னோ அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் பாராட்டி பேசியது பின்வருமாறு:-

"இதற்கு முன் இவரிடம் நான் பேசியதில்லை. அவர் ஆர்ம் பந்து வீசுவதை பார்த்தேன். அப்படி சித்தார்த்தை பார்த்த பின் "ஹேய் சித். விராட் கோலியை உங்களால் அவுட்டாக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்பதே என்னுடைய வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையாகும். அதற்கு முடியும் சார் என்று அவர் என்னிடம் சொன்னார். தற்போது அவர் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள். விராட் கோலியை அவுட்டாக்கியுள்ளார்" என்று பாராட்டி பேசினார்.


Next Story