உலக கோப்பை போட்டியில் இருந்து ரீஸ் டாப்லே, சமீரா விலகல்


உலக கோப்பை போட்டியில் இருந்து ரீஸ் டாப்லே, சமீரா விலகல்
x

உலக கோப்பை போட்டியில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே விலகி இருக்கிறார்.

பிரிஸ்பேன்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக களம் காணும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே பயிற்சியின் போது இடது கணுக்காலில் காயம் அடைந்தார்.

இதனால் அவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் சேர்க்கப்படுகிறார்.

இதேபோல் இலங்கை அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சமீரா பின்னங்கால் தசைப்பிடிப்பு காரணமாக அந்த ஆட்டத்தின் போது பாதியில் வெளிறேியது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பதிலாக 29 வயது வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story