5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு...!
ஆஷஸ் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. தொடரில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 3வது போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 4வது போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. இதனால் 4வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், டேன் லாரன்ஸ், ஓலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங்கு, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.