இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 118 ரன்னில் சுருண்டது


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 118 ரன்னில் சுருண்டது
x

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 118 ரன்னில் சுருண்டது.

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டமும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவால் 2-வது நாள் ஆட்டமும் முழுமையாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவர்களில் 118 ரன்னில் சுருண்டது.

அதிகபட்சமாக மார்கோ ஜேன்சன் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது.


Next Story