சஞ்சு சாம்சன் ஆதரவு பேனருடன் உலககோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற ரசிகர்கள்...!


சஞ்சு சாம்சன் ஆதரவு பேனருடன் உலககோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற ரசிகர்கள்...!
x

Image Courtesy: Rajasthan Royals

தினத்தந்தி 28 Nov 2022 6:25 AM GMT (Updated: 28 Nov 2022 6:26 AM GMT)

சஞ்சு சாம்சனுக்கு நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஹாமில்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக அந்த மழை போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இதனால் வரும் 30ஆம் தேதி நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழையால் கைவிடவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும்.

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேப்டன் கூறியதாவது,

நாங்கள் 6வது பந்துவீச்சாளர் வேண்டும் என விரும்பினோம். அதனால் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டார் என்றார். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் கால்பந்து உலககோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் ஆதரவு பேனருடன் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள பேனரில் கத்தாரில் இருந்து நிறைய அன்புகளுடன், நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் சஞ்சு சாம்சன் என்றும் எந்த அணியாக இருந்தாலும் சரி, வீரராக இருந்தாலும் சரி, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன் என தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் ஆதரவு சஞ்சு சாம்சனுக்கு அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.



Related Tags :
Next Story