டெஸ்டில் அதிவேக 50 விக்கெட்டுகள்... அக்சர் படேல் சாதனை


டெஸ்டில் அதிவேக 50 விக்கெட்டுகள்... அக்சர் படேல் சாதனை
x

டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அக்‌ஷர் பட்டேலின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 50-ஆக (12 டெஸ்ட்) உயர்ந்தது.

அகமதாபாத்,

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் 'டிரா'வில் முடிந்ததன் மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

கடைசி போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 50-ஆக (12 டெஸ்ட்) உயர்ந்தது.

அவர் இந்த மைல்கல்லை எட்ட 2,205 பந்துகள் வீசி இருக்கிறார். இதன் மூலம் குறைவான பந்துகள் வீசி 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு இந்த வகையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 2,465 பந்துகளில் 50 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது.


Next Story