டெஸ்டில் அதிவேக தொடக்க பார்ட்னர்ஷிப்: ரோஹித் - ஜெய்ஸ்வால் ஜோடி புதிய சாதனை.!


டெஸ்டில் அதிவேக தொடக்க பார்ட்னர்ஷிப்: ரோஹித் - ஜெய்ஸ்வால் ஜோடி புதிய சாதனை.!
x

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ரோஹித் - ஜெய்ஸ்வால் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதலாவது இன்னிங்சில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர்.

இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். இதனால், இந்திய அணி வெறும் 35 பந்துகளிலேயே 50 ரன்களை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரோஹித் - ஜெய்ஸ்வால் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.


Next Story