சச்சின் தெண்டுல்கர் மீது மதிப்பு உயர்ந்தது எப்படி...? சக்லைன் முஷ்டாக்
அவரது வார்த்தை என் முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தேன் சச்சின் தெண்டுல்கர் மீது எப்படி மதிப்பு உயர்ந்தது என சக்லைன் முஷ்டாக் கூறி உள்ளார்.
புதுடெல்லி
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பல் புகழ்பெற்ற பந்துவீச்சாளர்களுடன் விளையாடி உள்ளார். கிளென் மெக்ராத், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், ஆலன் டொனால்ட், முத்தையா முரளிதரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் அக்தர் போன்றோர் அடங்குவர்.
1999 சென்னை டெஸ்டில் சச்சினுக்கும் இந்தியாவுக்கும் மனவேதனையை ஏற்படுத்திய சக்லைனின் தூஸ்ரா பற்றி உலகத்திற்கே தெரியும்.2015 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியின் போது கூட, சக்லைன் தெண்டுல்கரை 'தூஸ்ரா' பந்து வீச்சு மூலம் அவுட்டாக்கி உள்ளார்.
சக்லைன் vs சச்சின் போட்டி பற்றிய கதைகள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை.இதுவரை கேள்விப்படாத ஒரு கதை உங்களுக்காக.
சச்சினுக்கு எதிரான தனது திட்டம் எவ்வாறு தோல்வியடைந்தது என்பதை வெளிப்படுத்தி உள்ளார் சக்லைன்.
சக்லைன் தி நாதிர் அலி போட்காஸ்டில் இது குறித்து கூறியதாவது;
"எனக்கு ஒருமுறை சச்சினுடன் ஒரு சம்பவம் நடந்தது. நாங்கள் கனடா சென்றிருந்தோம். நான் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடிவிட்டு அங்கு வந்திருந்தேன். நான் அப்போது சிறுவன்.
சச்சின் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர், நான் அவருக்கு முதல் ஓவரை மிகவும் இறுக்கமாக வீசினேன், அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். நான் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினேன். அவர் என்னிடம் வந்து மிக அழகாக கூறினார் "சகி... நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை. மேலும் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லும் நபராக நீங்கள் தோன்றவில்லை. நீங்கள் மிகவும் ஒழுக்கமான நபர் என்று நான் நினைத்தேன்". அவர் அதை மிகவும் அழகாகச் சொன்னார், அடுத்த 4 ஓவர்களுக்கு அவர் என்னை நம்பினார், அவருடைய வார்த்தைகள் என்னைத் தாக்கியது.
"இவை உத்திகள். யாராவது உங்களிடம் நன்றாகப் பேசினால், நீங்கள் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவீர்கள். சச்சின் அடுத்த 4-5 ஓவர்களில் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியையாவது அடித்துக் கொண்டே இருந்தார், நான் அவரை மதிக்க ஆரம்பித்தேன்.
அதற்குள் அவர் நன்றாக செட் ஆகிவிட்டார், விஷயங்கள் என் கையை விட்டுப் போய்விட்டன.
பின்னர் மாலையில், நாங்கள் சந்தித்தோம் அப்போது நான் அவரிடம் 'நீங்கள் ஒரு புத்திசாலி' என்று கூறினேன். அதை கேட்டு அவர் சிரிக்கத் தொடங்கினார். அவர் என்னை எவ்வளவு நன்றாக டிராப் செய்தார். மட்டையால் அல்ல, ஆனால் அவரது வார்த்தைகளைப் பயன்படுத்தி மட்டுமே, "என்று சக்லைன் கூறி உள்ளார்.