முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 18 Aug 2022 7:10 AM GMT (Updated: 18 Aug 2022 7:15 AM GMT)

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹராரே,

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது. வெறும் 5 நாட்கள் இடைவெளியில் (ஆக.18, 20, 22-ந்தேதிகளில்) இந்த தொடரே முடிந்து விடும் என்றாலும் இது 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றாக அமைந்துள்ளது. அதாவது இதில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளி வழங்கப்படும். இதன்படி இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹராரேயில் இன்று அரங்கேறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 63 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 51-ல் இந்தியாவும், 10-ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் சமனில் முடிந்தது.




Next Story