முதல் டி20 : மழையால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி தொடங்குவதில் தாமதம்
டர்பனில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
டர்பன்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது போட்டி டர்பனில் இன்று நடைபெறுகிறது
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட்பால் (20 ஓவர், ஒருநாள் போட்டி) தொடரில் சீனியர் வீரர்களான விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டர்பனில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .
Related Tags :
Next Story