முதல் டி20 போட்டி; குர்பாஸ் அபார சதம்...யுஏஇ-க்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்..!

Image Courtesy: @EmiratesCricket
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 100 ரன்கள் அடித்தார்.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து இப்ராகிம் ஜட்ரான் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த குர்பாஸ் 100 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து அஸ்மத்துல்லா உமர்சாய் களம் இறங்கினார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி ஆட உள்ளது.






