வங்காளதேசம் -இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் 'டிரா'


வங்காளதேசம் -இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிரா
x

Image Courtesy : ICC Twitter 

வங்காளதேசம் -இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

சட்டோகிராம்:

வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு தனது முதல் இன்னிங்க்சில் விளையாடிய வங்காளதேச அணி தொடக்க வீரர் ஹசன் ஜாய் அரை சதமடித்து 58 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹொசைன் சாண்டோ மற்றும் மோமினுல் ஹக் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் சிறப்பாக ஆடிய தமீம் இக்பால் சதமடித்து அசத்தினார். 133 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர் முஷ்பிகுர் ரஹீம் - லிட்டன் தாஸ் ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர். சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் சதமடித்து அசத்தினார். லிட்டன் தாஸ் 88 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

இறுதியில் வங்காளதேச அணி 171 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 465 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்கள் அடித்தார். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தங்கள் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்தது.

நேற்று 5 வது நாள் ஆட்டம் நடைபெற்றது .இலங்கை அணியின் கேப்டன் சிறப்பாக டிமுத் கருணரத்னே விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இதன் பிறகு சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுக்களை இழந்தது. பின்னர் வந்த தினேஷ் சண்டிமால் 39 ரன்களும் ,நிரோஷான் டிக்வெல்லா 61 ரன்களும் எடுத்து நிலைத்து நின்று ரன்கள் எடுத்தனர் .இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தபோது 5 வது நாள் ஆட்ட நேரம் முடிவைடந்தது. இதனால் வங்காளதேசம் -இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.


Next Story