தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் பிராக்டர் காலமானார்


தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் பிராக்டர் காலமானார்
x

வேகப்பந்து வீச்சாளரான மைக், 401 முதல் தர போட்டிகளில் விளையாடி 21,936 ரன்களை எடுத்துள்ளதுடன் 36.01 பேட்டிங் சராசரி வைத்திருக்கிறார்.

கேப்டவுன்,

இதுபற்றி அவருடைய மனைவி மரியானா கூறும்போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர், சுயநினைவற்று இருந்த நிலையில், அதில் இருந்து மீண்டு வரவேயில்லை என கூறியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான மைக், 401 முதல் தர போட்டிகளில் விளையாடி 21,936 ரன்களை எடுத்துள்ளதுடன் 36.01 பேட்டிங் சராசரி வைத்திருக்கிறார். இவற்றில் 48 சதம் மற்றும் 109 அரை சதங்களும் அடங்கும். 1,417 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். நிறவெறி கொள்கையால் தென்ஆப்பிரிக்கா தனிமைப்படுத்தப்பட்டதும், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அவருடைய வாய்ப்பு நின்று போனது. அதன்பின்னர் அவர், அந்நாட்டின் முதல் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

1991-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா மீண்டும் விளையாட வந்தபோது, பயிற்சியாளராக அவர் செயல்பட்டார். அப்போது, ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை போட்டியின் அரையிறுதி வரை அணியை வழிநடத்தி சென்றார். இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.


Next Story