"சிறப்பான பேட்டிங்..என்ன ஒரு திறமை" - ஜெய்ஸ்வாலை பாராட்டிய விராட் கோலி
ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
பெங்களூரு,
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்தார்.
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரது பேட்டிங் திறமையை பலரும் பாராடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெய்ஸ்வாலை, பெங்களூரு வீரர் விராட் கோலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கோலி,
சமீபத்தில் தான் பார்த்த மிகச்சிறப்பான பேட்டிங் என்றும், ஜெய்ஸ்வாலின் திறமை அற்புதமானது என்றும் கோலி குறிப்பிட்டு உள்ளார். கோலியைப் போல் ஜெய்ஸ்வாலைப் பலரும் பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர்.