பெண்கள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்


பெண்கள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்
x

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டி20 தொடரும் அடுத்து டெஸ்ட் போட்டியும் நடைபெறும். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பையில் நேற்று நடந்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற உலக சாதனையை படைத்தார். இந்த போட்டியையும் சேர்த்து அவர் 101 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 100 ஆட்டங்களில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.


Next Story