சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறாதவர் அவர் மட்டுமே - சேவாக்


சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறாதவர் அவர் மட்டுமே - சேவாக்
x
தினத்தந்தி 28 Feb 2024 10:21 AM GMT (Updated: 28 Feb 2024 10:30 AM GMT)

இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

புதுடெல்லி,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிலேயே குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;-

"மிகைப்படுத்துதல் என்று வரும்போது குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக மிகைப்படுத்தப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு இப்போதும் ஆன்லைன் பேன்ஸ் கிளப் இல்லை. அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை. மக்கள் யாரும் இவர்தான் அடுத்த பெரிய ஸ்டார் என்று கொண்டாடியதில்லை. என்னைக் கேட்டால் தற்போது பெறுவதை விட அவர் அதிக பாராட்டு மற்றும் மிகைப்படுத்தலுக்கு தகுதியானவர்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story