இவரின் பேட்டிங் எம்.எஸ்.தோனியின் நகல் போன்று உள்ளது - சுனில் கவாஸ்கர்


இவரின் பேட்டிங் எம்.எஸ்.தோனியின் நகல் போன்று உள்ளது  - சுனில் கவாஸ்கர்
x

கோப்புப்படம்

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

மும்பை,

2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கொல்கத்தா அணி ரஹ்மனுல்லா குர்பாஸை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்க வேண்டும். அவரது பேட்டிங் ஸ்டைல் எம்.எஸ்.தோனியின் நகல் போன்று உள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

"நான் பார்த்தவற்றின் அடிப்படையில் குர்பாஸின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர். மேலும் அவரது பேட்டிங் எம்.எஸ். தோனியின் சிறிய நகல் போன்றது. அதனால்தான் நான் அதை விரும்புகிறேன். கொல்கத்தா அணி ரஹ்மனுல்லா குர்பாஸை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story