நான் குணமடைந்து வருகிறேன் - ரிஷப் பண்ட்
நான் குணமடைந்து வருகிறேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட் சிகிச்சைக்கு பின் தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார்.
இதனால், ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஆனால், அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்ததால் அந்த அணிக்கு தனது ஆதரவை பண்ட் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் நேற்று கூறுகையில், நான் குணமடைந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் குணமடைந்து வருகிறேன். நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்தேன் அங்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் இருந்தனர். ஆகையால் நான் அவர்களை சந்தித்தேன்.
வீரர்களின் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை நான் பார்த்தேன். நான் அணியினருடன் கலந்துரையாடினேன்' என்றார்.