இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்- நடராஜன் நம்பிக்கை


இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்- நடராஜன் நம்பிக்கை
x

கோப்புப்படம் 

அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சேலம்,

வேகப்பந்து வீச்சாளர் நடராஜ் சேலத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாரத்தான் என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் அல்ல. அனைவரும் ஓடலாம். மாரத்தான் உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் கொடுக்கும். அனைத்து விளையாட்டுக்கும் ரன்னிங் தேவைப்படுகிறது.

நடராஜன் அடுத்த ஆண்டு வரும் ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடுவேன் என நம்புகிறேன் என்றும் அதில் நான் நன்றாக விளையாடும் பட்சத்தில் எனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டியை அடுத்து அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் இருக்கும் அவர் நடராஜன் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story