ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா மோதல் - பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளிட்டு

கோப்புப்படம்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பான, பயிற்சிப்போட்டிகள் குறித்த அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துபாய்,
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர், வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பான, பயிற்சிப்போட்டிகள் குறித்த அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பயிற்சிப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை அக்டோபர் 17 ஆம் தேதி ஆஸ்திரேலியா உடனும், அக்டோபர் 19ஆம் தேதி நியூசிலாந்து உடனும் மோதவுள்ளன.
இரண்டு போட்டிகளும் பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






