ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியல்: ஹர்திக் பாண்டியா முன்னேற்றம்

Image Tweeted By @hardikpandya7
20 ஓவர் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர், பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துபாய்,
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2-வது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.
அதே போல் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும் ரிஸ்வான் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் சம்சி உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரசித் கான் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர்களில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 8-வது இடத்தில் உள்ளார்.






