திரும்பும் இடமெல்லாம் மஞ்சள் படை...! மும்பை வான்கடே மைதானத்தை ஆக்கிரமித்த சிஎஸ்கே ரசிகர்கள்..!


திரும்பும் இடமெல்லாம் மஞ்சள் படை...! மும்பை  வான்கடே மைதானத்தை ஆக்கிரமித்த சிஎஸ்கே ரசிகர்கள்..!
x

சிஎஸ்கே அணிக்கு எந்த மைதானத்திற்கு சென்றாலும் ரசிகர்கள் ஆதரவு அதிக அளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட், சான்ட்னர், துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை ரசிகர்கள் அதிக அளவு திரண்டு அணியை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக போட்டி மும்பையில் நடைபெறுவது போல தெரியவில்லை .பார்க்கும் இடமெல்லாம் மஞ்சள் ஜெர்சியை பார்க்க முடிந்தது. சிஎஸ்கே அணிக்கு எந்த மைதானத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அதிக அளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story