கேட்ச் புடிக்க தெரியாத உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது: தீபக் சஹாரை கலாய்த்த தோனி - வீடியோ..!


கேட்ச் புடிக்க தெரியாத உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது: தீபக் சஹாரை கலாய்த்த தோனி - வீடியோ..!
x

குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அகமதாபாத்,

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தார். உடனே டோனி உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது என்று விலகினார். அப்போது அருகில் இருந்தவரிடம் கேட்ச் பிடிக்க தெரியல இவனுக்கு எப்படி ஆட்டோகிராப் போட முடியும் என தீபக் சஹாரை தோனி கலாய்த்தார்.

முடிவில் தீபக் சாஹர் அணிந்திருந்த சிஎஸ்கே ஜெர்சியில் டோனி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கேட்சை தீபக் சாஹர் பிடிக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.Next Story