மில்லரை நினைத்து பெருமைப்படுகிறேன்- ஹார்திக் பாண்டியா பாராட்டு


மில்லரை நினைத்து  பெருமைப்படுகிறேன்- ஹார்திக் பாண்டியா  பாராட்டு
x

Image Courtesy : IPL

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய குஜராத் 3 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.அந்த அணியின் மில்லர் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார் .

இந்நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது ;

அவர் தனது ஆட்டத்தை உயர்த்திய விதம் குறித்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர். அவருடன் விளையாடுவதையும், பெருமையாக கருதுகிறேன். , அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.

எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அவரை ஏலத்தில் வாங்கியதிலிருந்து அவர் ஒரு மேட்ச் வின்னர். அவருக்கு அந்த முக்கியத்துவத்தையும், அவரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்ற தெளிவையும் கொடுப்பது முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்


Next Story