20 வருடம் கழித்து ஐசிசி இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா-ஆஸ்திரேலியா: ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.
லண்டன்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளதன் மூலம் 20 வருடங்களுக்கு பின்னர் ஐசிசி நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் கடைசியாக 2003ல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணி விவரங்கள்:-
ஆஸ்திரேலியா:-
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், ஜோஷ் இங்கிலிஸ், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
ரிசர்வ் வீரர்கள்:-
மிட்ச் மார்ஷ், மாட் ரென்ஷா
இந்தியா:-
ரோஹித் சர்மா (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பாரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக், உமேஷ் யாதவ்.
ரிசர்வ் வீரர்கள்:-
யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.