இந்தியா - கனடா போட்டி : மழையால் டாஸ் போடுவதில் தாமதம்


இந்தியா - கனடா போட்டி : மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
x

மழை காரணமாக இந்தியா - கனடா போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

லாடெர்ஹில்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இன்று நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, கனடாவுடன் (ஏ பிரிவு) மோதுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வரிசையாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறி விட்டது

கனடா அணியை எடுத்துக் கொண்டால், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முடிந்த வரை கடும் சவால் அளிக்க முயற்சிக்கும். இந்த நிலையில், மழை காரணமாக இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

.

1 More update

Next Story