மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை பந்தாடிய இந்தியா- 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி


மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை பந்தாடிய இந்தியா- 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
x

தாய்லாந்து அணியை 37 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.

சில்கட்,

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. பாகிஸ்தானிடம் மட்டும் ஒரேயொரு தோல்வியை அடைந்த இந்திய அணி மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

சில்கட்டில் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய தாய்லாந்து அணியில் கோன்சாரோஎன்கை மட்டுமே இரட்டை இலக்கத்தையே எட்டினார். அவரும் 12 ரன் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கம் அல்லது ரன்னே அடிக்காமல் என மளமளவென ஆட்டமிழக்க, 15.1 ஓவரில் வெறும் 37 ரன்களுக்கு தாய்லாந்து அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்நேக் ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 38 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட்களை மட்டுமே 40 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரூப் சுற்றில் 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story