ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்தியா- நேபாளம் இன்று மோதல்


ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்தியா- நேபாளம் இன்று மோதல்
x

நேரடியாக கால்இறுதியில் ஆடும் இந்திய அணி இன்று (செவ்வாய்க்கிழமை) கால்இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை சந்திக்கிறது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று விட்டது. இதன் ஆண்கள் பிரிவில் இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களம் இறங்குகிறது.

நேரடியாக கால்இறுதியில் ஆடும் இந்திய அணி இன்று (செவ்வாய்க்கிழமை) கால்இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, திலக் வர்மா, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், அர்ஷ்தீப்சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் இந்தியா வலுவாக இருப்பதால் இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகல் 11.30 மணிக்கு நடக்கும் மற்றொரு கால்இறுதியில் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. நாளை நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் இலங்கை- ஆப்கானிஸ்தான், வங்காளதேசம்- மலேசியா அணிகள் மோதுகின்றன.


Next Story