உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுலுக்கு இடம்


உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுலுக்கு இடம்
x
தினத்தந்தி 3 Sep 2023 9:00 PM GMT (Updated: 3 Sep 2023 9:00 PM GMT)

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் காயத்தில் முழுமையாக குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றிதழ் அளித்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 15 பேர் கொண்ட அணியை செப்.5-ந்தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. அதன் பிறகு அவசியம் இருந்தால் 28-ந்தேதிக்குள் அணியில் ஏதாவது மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் இருந்து உலகக் கோப்பை போட்டிக்கு 15 பேர் கொண்ட அணி இறுதி செய்யப்படுகிறது. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் காயத்தில் முழுமையாக குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றிதழ் அளித்துள்ளது. அதனால் அணியில் அவரது இடம் உறுதியாகி விட்டது. மாற்று வீரராக ஆசிய போட்டிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்படுகிறார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, புதுமுக இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மா ஆகியோரும் நீக்கப்படுகிறார்கள். மற்றபடி ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் அப்படியே தொடருவார்கள்.


Next Story