ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் - கங்குலி கணிப்பு


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்  - கங்குலி கணிப்பு
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ம் தேதி இந்தூரில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில்,

'இந்தியா 4-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என நான் நினைக்கிறேன். இந்தியாவை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு கடினமாக இருக்கும். இதுமாதிரியான பிட்ச் கண்டிஷன்களில், நாமே அனுபவம் வாய்ந்த அணியாக இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story