இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதி இலவசம்


இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் டெஸ்ட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதி இலவசம்
x

image courtesy; twitter/ @BCCIWomen

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

சென்னை,

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28-ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடைபெறும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும், இந்த டிக்கெட் விலை ரூ.150 எனவும் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story