உள்நாட்டில் தொடர்ந்து 16-வது டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா
சவால்மிக்க அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
அகமதாபாத்,
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் 'டிரா'வில் முடிந்ததன் மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
கடைசியாக 2012-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதன் பிறகு உள்ளூரில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.
அதேபோல, சவால்மிக்க அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். 2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா இதே போன்று 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை போட்டுத் தாக்கியிருந்தது.
இதில் இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த வரலாற்று சாதனையும் அடங்கும்.
Related Tags :
Next Story