நியூயார்க்கில் டி20 உலக கோப்பைக்கான பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்


நியூயார்க்கில் டி20 உலக கோப்பைக்கான பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
x

Image Grab On Video Posted By @BCCI

டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கினர்.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தனது பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வரும் 1ம்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்காகவும், டி20 உலகக்கோப்பை தொடருக்காகவும் இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தங்களது தீவிர பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Next Story