ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு..!


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு..!
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த தொடரில் முக்கிய ஆட்டமாக பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்;

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தொடரிலிருந்து விலகியுள்ளார்.


Next Story