இந்திய அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர் - கேன் வில்லியம்சன்


இந்திய அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர் - கேன் வில்லியம்சன்
x

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது

வெல்லிங்டன்,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. . இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது ;

எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. அவற்றின் ஆழம் யாருக்கும் இரண்டாவது இல்லை. இந்த அணி வீரர்களின் திறமையை நான் பார்த்திருக்கிறேன், அந்த அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்.

டிரென்ட் போல்ட் எங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் எங்கள் அணியில் மிகப்பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் காண்போம் என நம்புகிறோம்.

மேலும் (ஐபிஎல்) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டது பற்றி, பேசிய அவர் ;

சில நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கையை அறிந்ததாகவும், இது ஒரு "சிறப்பு போட்டி" என்பதால் லீக்கில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும் கூறினார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்அணியில் பல மகிழ்ச்சியான நேரமும் ,நினைவுகளும் இருந்தன, என கூறினார்.


Next Story