ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
மும்பை,
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
இதனிடையே, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்குவாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ஷிவம் துபே, ரவி பிஷோனி, அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார்.
கடைசி 2 டி20 போட்டியின் போது ஷ்ரேயாஷ் அய்யர் அணியில் இணைவார். அவர் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.