உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு...காயம் காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் விலகல்...!
உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி,
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இதையடுத்து அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் காயம் அடைந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இடம் பெறவில்லை. ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:
பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான், பக்கார் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷாபிக், முகமது ரிஸ்வான், சாத் சகீல், இப்டிகார் அகமது, சல்மான் அலி ஆஹா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ராப், ஹசன் அலி, ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம்.