ஐபிஎல் 2023: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு...! காயத்தால் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல் ?


ஐபிஎல் 2023: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு...! காயத்தால் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல் ?
x

சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

சென்னை,

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி, காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

கடந்த 2022 ஐபிஎல் சீசனில் முகேஷ் சவுத்ரி, முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில் அவர் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இதனால் சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து சென்னை அணியின் சி.இ.ஓ . காசி விஸ்வநாதன் பேட்டி ஒன்றில் கூறியதாவது ,

நாங்கள் முகேஷுக்காக காத்திருக்கிறோம், ஆனால் எங்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை. கடந்த ஆண்டு எங்களின் பந்துவீச்சில் முக்கியத் தூண்களில் அவரும் ஒருவர். அவர் இந்த ஐபிஎல் தொடரை தவறவிட்டால் அது துரதிர்ஷ்டவசமாக இருக்கும். என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story