ஐபிஎல் 2023: டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்..? - துணை கேப்டன் இவரா...!


ஐபிஎல் 2023: டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்..? - துணை கேப்டன் இவரா...!
x

Image Courtesy : IPL

டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்து காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

மும்பை,

2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதியன்று அகமதாபாத்தில் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் முதற்கட்ட பயிற்சிகளுக்காக ஏற்பாடு செய்து வருகின்றன.

நடப்பு சாம்பியனான பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே அகமதாபாத்தில் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது. தோனி தலைமையிலான சென்னை அணி மார்ச் 2வது வாரத்தில் பயிற்சி முகாமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து அணிகளும் தங்கள் அணியின் கேப்டனை அறிவித்துள்ள நிலையில் டெல்லி அணியின் கேப்டன் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கினார். இதனால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

எனவே இந்த ஆண்டு டெல்லி அணியை யார் வழிநடத்துவார் என கேள்வி எழும்பி உள்ள நிலையில் அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நியமிக்க பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல்லில் அதிக அனுபவம் வாய்ந்த வார்னர் தலைமையில் ஐதரபாத் அணி கடந்த 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் டெல்லி அணியின் துணை கேப்டனாக அக்சர் படேலை நியமிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே டெல்லி அணியின் கேப்டன், துணை கேப்டன் யார் என்பது தெரிய வரும்.



Next Story