எலிமினேட்டரில் லக்னோவுடன் மோதப்போவது யார்? மும்பையா? பெங்களூருவா? - ஹர்பஜன் சிங் பதில்


எலிமினேட்டரில் லக்னோவுடன் மோதப்போவது யார்? மும்பையா? பெங்களூருவா? - ஹர்பஜன் சிங் பதில்
x

நடப்பு ஐபிஎல் தொடரில் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.

பெங்களூரு,

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, குஜராத் - சென்னை தரவரிசையில் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. இந்த அணிகள் தகுதிச்சுற்று 1-ல் விளையாட உள்ளன.

3-ம் இடத்தில் உள்ள லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் விளையாட உள்ளது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்கள் லக்னோ அணியுடன் எலிமினேட்டரில் எந்த அணி மோதும் என்பதை உறுதி செய்யும். அதன்படி, மும்பை அல்லது பெங்களூரு அல்லது ராஜஸ்தான் இதில் ஏதாவது ஒரு அணி லக்னோவுடன் எலிமினேட்டரில் மோத உள்ளது

இந்நிலையில், லக்னோ அணியுடன் எலிமினேட்டர் சுற்றில் யார் விளையாடுவதற்கான வாய்ப்பு குறித்து ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் கூறுகையில், சென்னையில் நடைபெற உள்ள எலிமினேட்டர் சுற்றில் லக்னோவுடன் பெங்களூரு மோத அதிக வாய்ப்புகள் உள்ளது. கோலியும், கம்பீரும் மீண்டும் எதிர் எதிரே சந்தித்தால் அவர்கள் மீண்டும் சண்டையிடமாட்டார்கள் என நான் நம்புகிறேன். அது மட்டும் தான் என் கவலை.

முன்னதாக, கடந்த முறை லக்னோ - பெங்களூரு மோதியபோது பெங்களூரு வீரர் விராட் கோலி லக்னோ வீரர் நவீன் உல் ஹக் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விராட் கோலியும் பெங்களூரு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெங்களூருவும், லக்னோவும் எலிமினேட்டர் சுற்றில் மோத அதிக வாய்ப்பு உள்ளதாக ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.


Next Story