ஐ.பி.எல். 2024: சி.எஸ்.கே. பயிற்சி முகாமில் இணைந்த நியூசிலாந்து நட்சத்திரங்கள்


ஐ.பி.எல். 2024: சி.எஸ்.கே. பயிற்சி முகாமில் இணைந்த நியூசிலாந்து நட்சத்திரங்கள்
x

image courtesy: twitter/@ChennaiIPL

தினத்தந்தி 17 March 2024 4:42 AM GMT (Updated: 17 March 2024 5:54 AM GMT)

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணியின் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தற்போது அனைத்து அணிகளும் வீரர்களை ஒன்றினைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதில் சி.எஸ்.கே. அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர்களான மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இந்த பயிற்சி முகாமில் நேற்று இணைந்தனர்.


Next Story