ஐ.பி.எல். 2024; விபத்தில் சிக்கிய குஜராத் வீரர்


ஐ.பி.எல். 2024; விபத்தில் சிக்கிய குஜராத் வீரர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 March 2024 9:26 PM GMT (Updated: 3 March 2024 11:34 PM GMT)

ஐ.பி.எல். போட்டிக்கான குஜராத் அணியின் பயிற்சியில் அவர் இணைவதில் சில நாட்கள் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான விக்கெட் கீப்பர் 21 வயதான ராபின் மின்ஸ் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் ரூ.3.60 கோடிக்கு ஏலம் போனார். அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.

சமீபத்தில் சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்டில் (23 வயதுக்குட்பட்டோர்) கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த நிலையில் அவர் ராஞ்சியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தில் சிக்கினார்.

இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றும் அவரது தந்தை பிரான்சிஸ் கூறுகையில்,

ராபினுக்கு ஏற்பட்ட காயம் லேசானது தான். பயப்படும் அளவுக்கு இல்லை. அவர் நன்றாக இருக்கிறார் என்றார். என்றாலும் ஐ.பி.எல். போட்டிக்கான குஜராத் அணியின் பயிற்சியில் அவர் இணைவதில் சில நாட்கள் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.


Next Story