ஐ.பி.எல். 2024: கேப்டன் மட்டுமல்ல.. ஜெர்சியிலும் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்


ஐ.பி.எல். 2024: கேப்டன் மட்டுமல்ல.. ஜெர்சியிலும் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்
x

2024 ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

மும்பை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் கேப்டன் மட்டுமின்றி ஜெர்சியிலும் மாற்றம் செய்துள்ளது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான புதிய ஜெர்சியை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.


Next Story