ஐபிஎல் - 5வது முறை மகுடம் சூடிய சென்னை... வெற்றிக் கொண்டாட்டத்தின் புதிய வீடியோ
சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனை சென்னை வீரர்கள் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடினர்.
16-வது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனை சென்னை வீரர்கள் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடினர்.
இந்நிலையில் சிஎஸ்கே கோப்பையை வென்றதை சென்னை அணி வீரர்கள் பஸ் மற்றும் ஓய்வு அறையில் கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Celebrating the Super Kings Way
— Chennai Super Kings (@ChennaiIPL) June 2, 2023
Watch Full https://t.co/KfsT53y6J2#CHAMPION5 #WhistlePodu #Yellove pic.twitter.com/JzhOEohAcE