ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 4 April 2024 1:34 PM GMT (Updated: 4 April 2024 1:39 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன் படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story