ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹசரங்கா விலகல் - இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

image courtesy:AFP
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார்.
கொழும்பு,
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா நடப்பு சீசனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின்போது இடது குதிகால் பகுதியில் காயமடைந்த அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






